உலகின் அதி பயங்கர தீவிரவாதியும் , அமெரிக்காவில் 9 /11 ல்
நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரண கர்த்தாவுமான
"ஒசாமா பின் லேடன்"ஐ இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கி.மீ.
தொலைவில் உள்ள "அப்போட்டாபாத்" என்ற இடத்தில
. சுட்டு வீழ்த்தியதன் மூலம் தன் பத்து வருட பகையை தீர்த்து கொண்டது
அமெரிக்கா......இதற்காக அமெரிக்கா செய்த செலவு இந்திய மதிப்பில்
கிட்டத்தட்ட 900 லட்சம் கோடி ரூபாய்...
அமெரிக்காவில் பல தரப்பட்ட மக்களும் இப்போது ஒன்றிணைந்து
இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .. ஒரே கட்சிக்குள்ளேயே இரு வேறு அணிகளாக இருக்கும்
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் , ஹிலாரி கிளிண்டனும்
ஒன்றாக அமர்ந்து பாகிஸ்தானில் நடந்த ஒசாமாவிற்கு எதிரான தாக்குதலை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்ததை தொலைக்காட்சிகளில் காண முடிந்தது ...
."வேற்றுமையில் ஒற்றுமை"- நாம் சொல்லி கொண்டிருப்பதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்
எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது அமெரிக்கா.. இதன் மூலம்
ஒரு பக்கம் அமெரிக்காவிடம் பணத்தை வாங்கி கொண்டு,மறுபக்கம் தீவிரவாதத்தை உரம் போட்டு வளர்த்து கொண்டிருந்த பாகிஸ்தானின் இரட்டை சாயம் வெளுத்தது.... 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க மக்கள் அரசியல் , நிறம் , இனம் இதையெல்லாம் மறந்து தீவிரவாதத்திற்கு எதிரான அணியில்
ஒன்று பட்டு நிற்கிறார்கள் ..அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று.....மற்ற நாடுகளில் நடக்கும் தீவிரவாதங்களுக்கு பண,ஆயுத உதவிகளை செய்து வந்த அமெரிக்கா 9/11 தாக்குதலுக்கு பிறகு
ஆடிப்போனது என்னமோ உண்மை...ஆனால் துவண்டு போய் விடவில்லை ...... தன்னுடைய புலனாய்வு துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்த அமெரிக்கா
சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு விசயத்தையும் விடவில்லை...
அமெரிக்காவின் கடுமையான சட்ட திட்டங்களும் , விசாரணைகளும் ஷாருக்கான் ,
கமல் ஹாசன் போன்ற பிற நாட்டு பிரபலங்களோடு மட்டும் நிற்காமல் தன்
நாட்டு அமைச்சர்கள் மீதும் கூட பாய்ந்தது...
நாட்டின் இறையாண்மைக்கும்,பாதுகாப்பிற்கும் எதிரான எந்த ஒரு சின்ன விசயத்தையும் அமெரிக்கா இளப்பமாக எடுத்துக் கொள்ளவில்லை...
அதனால் தான் 9/11 தாக்குதலுக்கு பிறகு எந்த ஒரு அசம்பாவிதமும் அமெரிக்காவில் நடக்கவில்லை..
ஒபாமாவும் 9/11 தாக்குதல் "புஷ்" ஆட்சிக் காலத்தில் நடந்தது , அவரே இதற்கு முழுக்க , முழுக்க காரணம் என்று சொல்லி அரசியல் லாபம் தேடாமல் ஒசாமாவை
அழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது....
இதே இந்தியாவில் நடந்து வரும் கூத்தை சற்று உற்று பார்ப்போமா......
பத்து வருடங்களுக்கு முன்னாள் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய "அப்சல் குரு" வை தூக்கில் போட சொல்லி உச்ச நீதி மன்றம்
தீர்ப்பு வழங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் அந்த தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை...."அப்சல் குரு"வே என்னை தூக்கில் போட்டு விடுங்கள் என்று சொல்லியும் மெத்தனமாய்
இருக்கிறது தற்போதைய மத்திய அரசு ...
அப்சல் குருவை தூக்கில் போடுவதால் நாட்டின் அமைதி கெட்டுவிடும் என்றும்,
தூக்கில் போடாததற்கு முந்தைய அரசே காரணம் என்றும் பல காரணங்களை சொல்லி தப்பித்து கொள்ளும் மத்திய அரசு "அப்சல் குரு"வை தூக்கில் போடுவதற்கு அவன் நம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவன் என்ற ஒரு காரணம் போதாதா?...
வேறு நாட்டிற்கு உள்ளேயே சென்று தீவிரவாதியை அழித்த
அமெரிக்கா எங்கே ? உள் நாட்டு தீவிரவாதியை தூக்கில் போட சொல்லி
தீர்ப்பு வந்தும் அரசியல் லாபத்திற்காக அதனை நிறைவேற்ற வக்கில்லாமல் இருக்கும் தற்போதைய இந்தியா எங்கே ?
இது மட்டுமா?.. 26 /11 மும்பை தாக்குதலில் பல நூறு பேர்களின் உயிர் இழப்புக்கு காரணமான
"கசாப்" இன்று வரை பல நூறு கோடிகள் செலவு செய்யப்பட்டு மத்திய அரசால்
காபந்து செய்யப்பட்டு வருகிறான்...அவன் உயிரோடு இருந்தால் தான் நிறைய தகவல்கள் சேகரிக்க முடியுமாம்..சேகரித்து என்ன செய்ய போகிறார்கள்...?
ஏற்கனவே 93 மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணமான "தாவுத்" , "லக்ஷர் இ தொய்பா" அமைப்பினை உருவாக்கியவனும் 26 /11
தாக்குதலுக்கு காரணம் ஆனவுனமான "சாயித்" மற்றும் 2001 பாராளுமன்ற தாக்குதலுக்கு
காரணமான "அஸார்" இவர்களுக்கெல்லாம் பாகிஸ்தான் தான் அடைக்கலம்
கொடுத்து வருகிறது என்று தெரிந்திருந்தும் என்ன செய்ய முடிந்தது?
இவர்களையெல்லாம் பிடிக்க முடியவில்லை என்பதை விட இவர்களை பிடிப்பதற்கும் , பிடித்தவர்களை தண்டிப்பதற்கும் இங்குள்ள
அரசாங்கத்திற்கு திராணி இல்லையே என்று நினைக்கும் போது தான்
பெரும் வேதனையாய் இருக்கிறது....
அமெரிக்கா எதை கொண்டாடினால் என்ன நமக்கு தான் இரு நாட்டு அதிபர்களும் பகையை மறந்து கொண்டாட "உலக கோப்பை" கிரிக்கெட் போட்டி
இருக்கிறதே ?... வெட்கமாக இருக்கிறது ......
அரசாங்கம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசியல்,இன,மொழி,மத வேறுபாடுகள் இல்லாமல்
தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று பட வேண்டும்... சகிப்புத்தன்மை ,அஹிம்சை என்று நம்மை நாமே ஏமாற்றி
கொண்டிருக்காமல் தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான சட்டங்களை
அமல்படுத்த வேண்டும்...இல்லையேல் இந்தியாவை பொறுத்த வரை
தீவிரவாதம் ஒரு "தீரா" வாதமாகவே இருக்கும் ....
6 comments:
எவ்வாளவு அடிச்சாலும் இவங்க தங்குவனுகோ என்று அவர்களுக்கு தெரியும்....
மிக அருமை. உணர்வுப்பூர்வமும் அறிவுப்பூர்வமும் ஒருங்கே அமைந்த கட்டுரை. இதுபோல் இன்னும் பல எழுதுக. பிடித்தவனை தண்டிக்கக்கூட திராணி இல்லையே? நமக்கு தான் இரு நாட்டு அதிபர்களும் பகையை மறந்து கொண்டாட "உலக கோப்பை" கிரிக்கெட் போட்டி இருக்கிறதே ?... போன்ற விமர்சனங்கள் எழுத்தொன்றும் கோடி பொன் பெறும்.
நன்றி..
இந்தியா விற்கு தீவிரவாதத்தை பொறுத்த வரை பக்கவாதம் வந்து விட்டது போல
im so surprised u taking america's sides!உலக போலீஸ் என்று நினைத்துக் கொண்டு அட்டூஷியம் செய்து வரும் அமெரிக்காவின் அட்டகாசங்களை உங்களைப் போன்றவர்கள் பெருமையாகப் பேசும் வரை அமெரிக்கவாதமும் தொடரத்தான் செய்யும்..9/11 தாக்குதல் வெகுவாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று...கமல் ஹாசன், ஷாருக்கான் ஆகியோரை நடத்திய விதம் கண்டு உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? இன்னொரு நாட்டினுள் அப்படியெல்லாம் சென்று ஒரு மிகப் பெரிய அட்டாக் செய்து விட முடியாது மற்ற நாடுகளால்..அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டும் தான் இவ்வாறு தலை விரித்து ஆடும்..தீவிரவாதிகளை தண்டிக்கும் விஷயத்தில் அப்படி திடீர் முடிவெடுத்து விட முடியுமா? iam totally against ur stand for america..
ஷஹி.. நான் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கவில்லை..ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான அவர்களது கடுமையான நடவடிக்கைகளையும் , 9 /11 தாக்குதலுக்கு பிறகு ,அவர்கள் ஒன்று பட்ட விஷயத்தையும் ஆதரிக்கிறேன்..ஷாருக்கான்,கமல் போன்றவர்களை மட்டுமல்ல அமெரிக்காவின் சில அமைச்சர்களையே விசாரித்திருக்கிறார்கள்..உண்மையில் பாராளுமன்றத்தையே தாக்கியவனையும்,பல நூறு உயிர்களை ஈவு,இரக்கமின்றி கொன்று குவித்தவனையும் தூக்கில் போட கூட அருகதை இல்லாத இந்திய அரசாங்கத்தை பார்த்து தான்
என் ரத்தம் கொதிக்கிறது..
You may stand against my view on america..But may not stand against my touugh view on terrorism..
Post a Comment