14 January 2012

வேட்டை - வேகத்தடை ...



ர்யா , மாதவன் , சமீரா ரெட்டி , அமலா பால் இவர்களுடன் லிங்குசாமி யு.டி.வி  யுடன் இணைந்து தயாரித்து இயக்கியதால் எனது எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012  லிஸ்டில் வேட்டையும் இருந்தது ... நடிகர்களோடு சேர்த்து யுவன் - நீரவ் ஷா , ஆக்சன் படத்திற்குண்டான பக்கா பார்முலா கதை இவையெல்லாம் இருந்தும் லிங்குசாமி வேட்டை யில் வேகத்தை கோட்டை  விட்டுவிட்டார் ...

போலிஸ்கார அப்பாவுக்கு பயந்தாங்கொள்ளி அண்ணனாக மூத்த மகன் மாதவன் , தைரியமான தம்பியாக ஆர்யா இருவரும் நடிக்க அவர்களுக்கு ஜோடி அக்கா - தங்கையாக சமீரா ரெட்டியும் , அமலா பாலும் நடித்திருக்கிறார்கள் ...அப்பா இறந்து விட மாதவனுக்கு தூத்துக்குடியில் எஸ்.ஐ வேலை கிடைக்கிறது ... அந்த ஊரில் போட்டி போட்டுக்கொண்டு அக்கிரமங்கள் செய்யும் இரண்டு வில்லன்களை அண்ணன் மாதவன் தம்பி ஆர்யாவின் உதவியுடன் வேட்டையாடுகிறார் ... கடைசியில் அண்ணன் - தம்பி சேர்ந்து வில்லன்களை அழிக்கும் பார்முலா கதை ...


ஹீரோக்களுக்கு ஆக்சன் இமேஜை ஏற்படுத்துவதில் வல்லவரான லிங்குசாமியுடன் இணைந்தும் ஆர்யாவிற்கு சக்சஸ்புல் ஆக்சன் ஹீரோவாக மாறக்கூடிய வாய்ப்பு வேட்டையில் நழுவிப்போனது துரதிருஷ்டமே ... தெனாவெட்டான உடல்மொழியில் நக்கலான பேச்சு , சண்டையில் ஆக்ரோஷம் இதெல்லாம் ஆர்யாவிற்கு நன்றாகவே வந்தாலும் , எல்லா சீன்களுக்கும் ஒரே மாதிரியான முகபாவத்தை காட்டுவது கொஞ்சம் டல்லடிக்கிறது ... குறிப்பாக அப்பா இறந்து போகும் சீனில் இவர் யார் வீட்டுக்கோ எழவுக்கு போனது போல முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் ... அவருக்கு என்ன சோர்வோ ? ...


டைட்டில் கார்டில் இரண்டாவதாக பெயர் வந்தாலும் ஆர்யாவுக்கு ஒரு படி மேலாகவே நல்ல வெயிட்டான கேரக்டர் மாதவனுக்கு , இருந்தாலும் அந்த வெயிட்டை கொஞ்சம் உடலில் அவர் குறைத்திருக்கலாம் , பாடல் , சண்டை காட்சிகளில் தொப்பை உறுத்துகிறது ...  பயந்தாங்கொள்ளி போலீசை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் , பயந்த முக பாவங்களில் சிரிப்பையும் வரவைக்கிறார் ...ஆனால் சீரியசான போலீசாக மாறிய பிறகும் ஏய் , ஊய் என்று கத்தி நம்மை சிரிக்க வைக்காமல் இருந்திருக்கலாம் ... சமீபத்தில் ஹிந்தியில் பெரிய ஹிட் கொடுத்து விட்டு தமிழில் இது போன்ற கேரக்டரில் நடிக்க மாதவனால் மட்டுமே முடியும் ...


சமீரா - அமலா இருவரில் சமீராவிற்கு நல்ல கதாபாத்திரம்..குறிப்பாக இவர் ஆர்யாவுடன் சண்டையிடும் காட்சிகள் அருமை...ஆனால் அழகான அமலாவுடன் இவர் சேர்ந்து நிற்கும் போது அக்கா போல அல்லாமல் அத்தை போல தெரியும் அளவிற்கு முற்றல் முகம் ...

அமலா எக்ஸ்ட்ரா இரண்டு பாடல்கள் ஆர்யாவுடன் வருகிறார் , ஆர்யாவிற்கு முத்தம் கொடுக்கிறார் அவ்வளவே ... யுவன் - முத்துகுமார் கூட்டணியில் பழைய மேஜிக் சுத்தமாக மிஸ்ஸிங் ... " பப்பரப்ப " , ஓபனிங் சாங் தவிர மற்றவை சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை ...



அண்ணன் , தம்பி இருவரின் குணாதசியங்களை   முதலிலேயே எளிதாக விளக்கி விடுவது , ஆர்யா - மாதவன் கெமிஸ்ட்ரி , அழகான அமலா பால் , இரண்டாம் பாதியில் வைக்கப்பட்ட சின்ன சின்ன ட்விஸ்டுகள் இவையெல்லாம் வேட்டையை கவனிக்க வைக்கின்றன ...

பார்முலா பழசாக இருந்தாலும் அதை விட அதரபழசான திரைக்கதை உத்தி , கிருஷ்ணா டாவின்ஷி உட்பட ஆறுபேர் கதை விவாதத்தில் இருந்தும் ஒன்றிரண்டை தவிர சுவாரசியம் இல்லாத , எளிதில் கணித்துவிடக்கூடிய சீன்கள் , கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வைத்து ஆர்யா மாதவனை வீரனாக மாற்றிய பிறகும் மாதவன் மெனக்கெடாமல் அதே தொப்பையுடன் அலைவது , சொத்தையான வில்லன்கள் , " ஏய் , அண்ணன தொட்டா என்ன நடக்கும் தெரியும்ல  , ஊரே பத்திக்கிட்டு எரியும் " இது போன்ற புளித்துப்போன மொக்கையான வசனங்கள் இவையெல்லாம் வேட்டைக்கு விறுவிறுப்பை குறைக்கும் வேகத்தடையாய் இருக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40 

14 comments:

Anonymous said...

சரியான விமர்சனம் நண்பரே.

Philosophy Prabhakaran said...

யாருங்க அவர் - கிருஷ்ணா டாவின்ஷி... ரொம்ப போல்டா எழுதியிருக்கீங்க...

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல விமர்சனம்.

ananthu said...

! சிவகுமார் ! said...
சரியான விமர்சனம் நண்பரே.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

Philosophy Prabhakaran said...
யாருங்க அவர் - கிருஷ்ணா டாவின்ஷி... ரொம்ப போல்டா எழுதியிருக்கீங்க...

அவர் ஒரு எழுத்தாளர் , குமுதம் இதழில் அவருடைய சிறுகதைகளும் , தொடர்கதைகளும் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவை ...உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

ஹாலிவுட்ரசிகன் said...
நல்ல விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்ல விமர்சனம்.

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ஹேமா said...

மாதவன்,ஆர்யா சூப்பர் ஜோடி.நல்லாயிருக்குமே.நல்ல விமர்சனம் அனந்து.அப்புறம் உப்புமடச்சந்தி வந்து பாத்தீங்களா?நீங்க தந்த தொடர் முடிச்சிட்டேனே !

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
எனக்கும் ஏன் போனோம் எனத்தான் இருந்தது
பகிர்வுக்கு நன்றி

ananthu said...

ஹேமா said...
மாதவன்,ஆர்யா சூப்பர் ஜோடி.நல்லாயிருக்குமே.நல்ல விமர்சனம் அனந்து.அப்புறம் உப்புமடச்சந்தி வந்து பாத்தீங்களா?நீங்க தந்த தொடர் முடிச்சிட்டேனே !

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஹேமா ! நிச்சயம் வருகிறேன் ...

Anonymous said...

நல்ல விமர்சனம்...பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

ananthu said...

Ramani said...
மிகச் சரியாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
எனக்கும் ஏன் போனோம் எனத்தான் இருந்தது
பகிர்வுக்கு நன்றி

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

ananthu said...

ரெவெரி said...
நல்ல விமர்சனம்...பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே...

உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...