11 October 2011

குறும்பட கார்னர் - நிழல் படம் ...

                                            
    திகில் படங்கள் எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்றது ... சில காட்சிகளில் சொதப்பினால் கூட மொத்த உழைப்பும் வீணாகக்கூடிய அபாயம்  அதிகம் ... தமிழ் சினிமாவின் இரண்டரை மணி நேர கலாசாரத்திற்காக திகில் படங்களில் தேவையில்லாமல் காமெடி , பாடல் என புகுத்தி கெடுப்பவர்கள்  ஏராளம் ...

      பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவதால் குறும்படங்களுக்கு  இந்த பிரச்சனைகள் இல்லை ... அதே சமயத்தில் சொல்ல வந்ததை சுருக்கமாக பயம் குறையாமல் சொல்ல வேண்டும் ... அந்த வரிசையில்  வந்திருக்கும் ஒரு குறும்படமே " நிழல் படம் " ... 

     " பண்ணையாரும் பத்மினியும்"  மூலம் காமெடியில் கலக்கிய வெயிலோன் திரையின் மற்றொரு திகில் படைப்பே இந்த " நிழல் படம் " ... சிட்டியில் பொது இடங்களில் புகைப்படங்கள்  எடுக்கப்பட்டு அதில் இருப்பவர்கள் வரிசையாக கொல்லப்படுகிறார்கள் ... அதிலும் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்கள் அவரவர்கள் வீட்டிற்கே அனுப்பபடுகின்றன ...
  
    நெஞ்சை உறைய வைப்பது போன்ற காட்சிகள் இல்லையென்றாலும் படம் ஸ்மார்டாக இருப்பது பிளஸ் ... மூவரே நடித்திருக்கும் இப்படத்தில் விமல்ராஜ் ஸ்கோர் செய்கிறார் ...  ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் , கோகுலின் ஒளிப்பதிவும் திகில் படத்திற்குன்டான உணர்வைக் கொடுக்கின்றன .... 

இயக்கம் : எஸ் . யு . அருண் குமார் ...


4 comments:

Anonymous said...

நல்ல படம் போல...

ananthu said...

ரெவெரி said...
நல்ல படம் போல...

ஆமா தாராளமா பாக்கலாம் ... . நன்றி ...

Unknown said...

படம் பார்த்தேன் நல்ல இருந்துச்சுப.அடுத்ததா ஒரு ஹாலிவுட்டு படத்தோட விமர்சனத்த எதிர்பார்க்கிறேன். வரட்டடடட..
malaithural.blogspot.com

ananthu said...

நன்றி ... அடுத்த தடவ செஞ்சுருவோம்ம்ம் ..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...