29 September 2011

பதிவு 50 ...

       
        ஒரு வருடம்  தாண்டி போனதே தெரியவில்லை ,  ஏதோ பதிவு எழுத ஆரம்பித்தது  நேற்று போல் இருக்கிறது இன்று இதோ ஐம்பதாவது பதிவு ...
 
 
      " வாங்க ப்ளாகலாம் " என்ற என்னுடைய அழைப்பை ஏற்று என்  பளாகுக்குள்  வருகை புரிந்து மூன்று லட்சம் ஹிட்ஸ்களுக்கு மேல் செல்வதற்கு காரணமாயிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  என் மனமார்ந்த   நன்றியை தெரிவித்துக் கொள்வதற்கும்  , இது வரை  எழுதிய பதிவுகளை ஒரு முறை திரும்பி பார்ப்பதற்கும்  இந்த பதிவினை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறேன் .. 
 
      மூன்று மணிநேர சினிமாவை பார்த்து விட்டு மூன்று நாட்கள் அதை பற்றி விவாதம் செய்யும் வழக்கம் உள்ள எனக்கு , அதையேன் விமர்சனமாக ப்ளாகில் பதிவு செய்ய கூடாது என்று ஒரு விதையை தூவிய பெருமை இயக்குனர் திரு.அமீரிடம் உதவி இயக்குனராக இருக்கும் என் அருமை நண்பன்  சேஷனையே சாரும் ... நன்பெண்டா ... 
 
              
      என் முதல் பதிவான கோரிபாளையம் விமர்சனம்  அவசரம் அவசரமாக பதட்டத்துடன் எழுதியதால் படத்தை போலவே எழுத்து பிழைகளுடன் மொக்கையாக இருக்கும் ... இதற்கு முதல் பின்னூட்டம் அளித்த                                     முத்துலட்சுமி முத்துலட்சுமி என்ற பதிவர் என் பிழைகளை  சுட்டிக் காட்டியதையும் நான் இங்கு நினைவு கூர்கிறேன் ...
 
     முடிந்த வரை எழுத்து பிழைகளை திருத்திக் கொண்டு வெளியிட்ட இராவணன் விமர்சனம் ஓரளவு கவனிக்க வைத்தது ... பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்  திரைமனத்தில் நீண்ட நாட்கள் முதல் பக்கத்தில் இருந்தது மகிழ்ச்சியை தந்தது ...
 
      தேர்தல் பிரச்சாரத்தின்  போது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக சன் டி.வி. யில் ஒளிபரப்பான ஆக்சன் காட்சி சினிமாவை விட பரபரப்பாக பேசப்பட்ட நேரமது ... அதில் நிறைய உள்நோக்கமும் , கேமரா ஜாலமும் இருந்ததை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததே

விஜயகாந்த் பிரச்சாரம் உளறலா ? உண்மையா ?  எதிர்ப்பையும் , வரவேற்பையும் ஒரு சேர பெற்றது இந்த பதிவை இன்ட்லியில்
பிரபலப்படுத்திய அனைவருக்கும் நன்றி ..

       தமிழ் புலமையும்  , ஆர்வமும் உடைய பத்திரிக்கையாளர் திரு.பத்மனை அண்ணனாக பெற்றது என் பாக்கியம் ... இவர் எழுதிய   "மூன்றாவது கண் " என்ற புத்தகம் தமிழக அரசின் விருதினை பெற்றது    குறிப்பிடத்தக்கது ...    

        தேர்தல்                        ஆணையத்தை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அதன் கருப்பு 
பக்கங்களை விளக்கும் மின்னஞ்சலை எனக்கு பத்மன் அனுப்பியிருந்தார்...
அதுவே நான் வெளியிட்ட தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்  பதிவு ... இந்த பதிவினை  வலைச்சரத்தில் வெளியிட்ட பதிவர் ஆனந்திக்கும் ,( மேடம் இப்போல்லாம் இந்த பக்கம் ஆளையே காணோம் ) ... இன்ட்லியில் இப்பதிவை பிரபலப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி ...அதேபோல் என் நிறைகுறைகளை தொடர்ந்து சுட்டிக் காட்டி வரும் திரு.ஸ்ரீநிவாசன் மற்றும் திரு.கணேசன் இருவருக்கும் என் நன்றிகள் ...

             
       நான் கமலின் தீவிர ரசிகன் , ஆனால் அவருடைய போலி  பகுத்தறிவு வாதம் அவருடைய ரசிகர்களையே வெறுப்படைய செய்யும் ... அந்த வெறுப்பின் வெளிப்பாடே கமல் - "நிஜ" நடிகன் பதிவு ... இனிய தமிழில் இப்பதிவிற்கு அதிக வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி ...நான் அஜித்தின் ரசிகன் அல்ல ... இருப்பினும் அவரின் நேர்மை , தைரியம் , முயற்சி இவையெல்லாம் என்னை கவர்பவை ... அந்த ஈர்ப்பின் மிகுதியே  "அசல்" நாயகன் அஜித் ... இன்ட்லியில் இப்பதிவை பிரபலப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி ...

       நான் ரசித்த இயக்குனர்களுள் பாலாவும் ஒருவர் .. ஆனால் இவர் ஒரே வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பது " அவன் இவன் " படம் பார்த்த போது புலப்பட்டது ... என்னைப் பொறுத்த வரை அவன்-இவன் அழுத்தமில்லாதவன்  ... வலைச்சரத்தில் இந்த பதிவை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்து வரும் இராஜராஜேஸ்வரிக்கு  என் நன்றி ...

       தனி படங்கள் பற்றிய விமர்சனங்களை  தாண்டி இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால சினிமாக்களை பற்றிய  பதிவே  அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் ... எழுத ஆரம்பித்த புதிதில் ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டிருந்தாலும் என் முழுமையான முதல் கவிதை உன் நினைவுகளோடு... அன்னையர் தினத்தில்   தாய்க்கு கவிதை எழுதலாம்
என யோசித்து பின் மனைவிக்கான கவிதையாய் அது மறுவியதே கண்களில் விழுந்தாய்...  ( பின் அம்மாவுக்கு கவிதை ரொம்ப பிடித்து போனது வேறு விஷயம் ) ... தொடர்ந்து எனக்கு பக்க பலமாய் இருக்கும் இந்த இருவருக்கும் என் நன்றி...

       என்
தெய்வதிருமகள் - திருட்டு தேவதை மற்றும் முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்  இரண்டையும் மூன்றாம் கோணத்தில் போட்டு பிரபலப்படுத்தியதோடு
மட்டுமல்லாமல் தொடர்ந்து எனக்கு  மூன்றாம் கோணத்தில் எழுத வாய்ப்பளித்து வரும் ஷஹிக்கும் , அபிக்கும் என் நன்றி...

  
       மங்காத்தா - "தல" ஆட்டம்  வரவேற்பை தொடர்ந்து எழுதிய
வில்லனாகிய ஹீரோக்கள்...  இவ்வளவு பெரிய வரவேற்பை பெறுமென்று நான் நிச்சயம்
எதிபார்க்கவில்லை ...இன்ட்லியில் இவையிரண்டையும் பிரபலமாக்கிய அனைவருக்கும் என் நன்றி ... அதேபோல் பிரபலமாகாவிட்டாலும் என் உயிரை வருடும் இசையைக் கொடுக்கும்   இசைஞானியை பற்றிய பதிவான
சூன் 2 - இசை பிறந்த நாள் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்த பதிவு ....

     கதை எழுதலாம் என யோசித்து கிறுக்கியதில் எனக்கு பிடித்தது மூட்டைபூச்சி சிறுகதை..என் சிறுகதையை தன்னுடைய லேடீஸ் ஸ்பெசல்
தீபாவளி மலரில் பயன்படுத்திக் கொள்வதாக சொல்லி எனக்கு உற்சாகமளித்த
திருமதி.கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் நன்றி ...

     மனதை பாதிக்கும்  படமாகவும் இருந்து வசூலையும் அள்ளுவது போல ஒரு படமும் வரவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த
போது வந்த  எங்கேயும் எப்போதும் - நிறைவான பயணம் ...


   
      சொந்த  விருப்பு , வெறுப்புகளை தாண்டி தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகங்கள் அளித்து வரும் அனைவருக்கும் என் நன்றி  ... இதோடு மட்டுமல்லாமல் பதிவர்களின் அனைத்து பதிவுகளையும் வெளியிட தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்10 , இனியதமிழ், உளவு , திரட்டி, வலைபூக்கள், உடான்ஸ், தினமணி போன்ற அனைத்து வலை பக்கங்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள் ...

15 comments:

இராஜராஜேஸ்வரி said...

50, vanga blogalam,
வாங்க ப்ளாகலாம் " வாழ்த்துக்கள்,!!

ananthu said...

உங்களை போன்றவர்களின் உற்சாகங்களே என்னை தொடர்ந்து எழுத வைக்கின்றன ... நன்றி ..

SATYA LAKSHMI said...

Very nice blog. Thanks for sharing

ananthu said...

Latha Vijayakumar said...
Very nice blog. Thanks for sharing

Thanks....

ஷஹி said...

வாழ்த்துக்கள் அனந்த்..திறமை எங்கிருந்தாலும் வெளிப்பட்டுத்தானே ஆக வேண்டும்..எனக்கும் அபிக்கும் நன்றி சொல்லியிருக்கிறீர்கள்..அவ்வளவுக்கு என்ன செய்து விட்டோம் என்று தெரியவில்லை..மென்மேலும் பல நூறு பதிவுகள்..பாராட்டுக்கள், நீங்கள் வெகுவிருப்பம் செலுத்தும் திரைத்துரையில் பிரபலமாக என்று எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்

ananthu said...

முனைவர்.இரா.குணசீலன் said...
வாழ்த்துக்கள்..

.. நன்றி ..

ananthu said...

ஷஹி ... இது வரை என் பயணத்தில் ஏதாவது ஒரு வகையில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வது என் கடமை ... அதை என் ஐம்பதாவது பதிவில் செய்தது எனக்கு மகிழ்ச்சி ... உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் ...

Anonymous said...

வாழ்த்துக்கள், தொடறட்டும் உங்கள் பயணம். . . . . .

Without Investment Data Entry Jobs !

http://bestaffiliatejobs.blogspot.com

ananthu said...

Online Works For All said...

வாழ்த்துக்கள், தொடறட்டும் உங்கள் பயணம். . . . .


.. நன்றி ..

Anonymous said...

50 க்கு வாழ்த்துக்கள்...

சிரமப்பட்டு நினைவு கூர்ந்து இந்த பதிவை எழுதி இருக்கீங்க...

ஆத்ம திருப்தி கிடைத்திருக்கும்...-:) தொடர்ந்து கலக்குங்கள்...

வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

அழகிய ஃபிளாஸ்பேக்.. வாழ்த்துக்கள்

Abhi said...

என்னை நினைவு கூர்ந்ததற்கு நன்றி அனந்த்! 50 பதிவுகள் எட்டியதற்கு என் பாராட்டுக்கள் ! இதி இன்னும் பல்கி பெருகிட வாழ்த்துக்கள் !

ananthu said...

ரெவெரி said...
50 க்கு வாழ்த்துக்கள்...
சிரமப்பட்டு நினைவு கூர்ந்து இந்த பதிவை எழுதி இருக்கீங்க...
ஆத்ம திருப்தி கிடைத்திருக்கும்...-:) தொடர்ந்து கலக்குங்கள்...
வாழ்த்துக்கள்...

நினைவு கூர்ந்து என்னை பாராட்டியமைக்கு நன்றி நண்பா ...

ananthu said...

சி.பி.செந்தில்குமார் said...
அழகிய ஃபிளாஸ்பேக்.. வாழ்த்துக்கள் ...

நன்றி பாஸ் ...

ananthu said...

Abhi said...
என்னை நினைவு கூர்ந்ததற்கு நன்றி அனந்த்! 50 பதிவுகள் எட்டியதற்கு என் பாராட்டுக்கள் ! இதி இன்னும் பல்கி பெருகிட வாழ்த்துக்கள் !

உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அபி ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...