அந்த இரயில்வே ஸ்டேஷனில் எப்பொழுதும் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருப்பதில்லை..சின்ன ஸ்டேஷன் என்பதால் போலீசுக்கும் அங்கு பெரிதாக வேலை இருக்காது..அவ்வப்போது கேட்கும் இரயில் ஓசையை தவிர , நிரந்தரமாய் கேட்பது அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் உடல் இளைத்த கருப்பு நாயின் குரைப்பும் , அதை அடக்க குருட்டு பிச்சைக்காரன் எழுப்பும் தடிச்சத்தமும் ...
இந்த நேரத்தில் , அதுவும் ஆள் அரவமற்ற இடத்தில் தலை நிறைய மல்லிகைப்பூவுடனும் , மாநிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய முயற்சியில் தோல்வியடைந்த மேக்-அப் புடனும் முப்பது வயதுக்கு மிகாத தோற்றமுடைய அந்த பெண் ஏன் அமர்ந்திருக்கிறாள் என்று அவளை கடந்து செல்லும் வெகு சிலரை போல நீங்களும் புருவம் உயர்த்தலாம் ... அவள் கண்களை சற்று நேரம் உற்றுப் பார்த்தால் அவள் யாருக்காகவோ ஆவலுடன் காத்திருப்பது புரியும் ...
அவள் முகத்தில் இப்போது பிரகாசம் .. ." ஏன் இத்தன லேட்டு ? எம்மா நேரமா காத்து கிடக்கிறது ! ? கொஞ்சம் பொய் கோபத்துடன் அவள் சிணுங்கினாள் ...
" ஏன் கோவிக்கற , வேலைய முடிச்சுப்புட்டு வர வேணாமா "
" ஆமா கலெக்டர் வேல "
" கலெக்டர் வேல இல்லன்னாலும் கவெர்மென்ட் வேலைல "
" இத்த சொல்லியே ஆள மடக்கிப்புடு "
" இந்தா மொதல்ல இந்த அல்வாவ சாப்புடு "
" ஏய் ! கடசில அல்வா தான் கொடுக்கப்போறேன்னு சொல்லாம சொல்றியா ?
" பிடிக்குமேனு வாங்கியாந்தா ரொம்ப தான் வார்றியே " சொல்லிக்கொண்டே திரும்ப முயன்றவனை அவள் கைகள் இறுக்கியணைத்தன ... அவர்கள் செய்கையில் வெட்கப்பட்டு நிலா சிறிது நேரம் மேகத்திற்குள் மறைந்தது ..
" எவ்வளவு நாள் தான் இப்படி சந்துலயும் , டேசன்லையும் மீட் பண்றது "
" கொஞ்ச நாள் பொறுத்துக்க , நம்ம நண்பன் வீடு காலியாவுது " சொல்லிக்கொண்டே கண் சிமிட்டினான் ...
" யாரு , வெளக்கமாத்துக்கு சட்ட போட்ட மாதிரி வெட வெடன்னு இருப்பானே அவனா ?.. அவனும் அவன் பார்வையும் ... சுத்தமா சரியில்ல "
" ஆமா அவன் கூட என்ன குடும்பமா நடத்த போற , சாவிய கொடுத்துட்டு அவன் பாட்டுக்கு போவ போறான் "
" அது சரி , ஏற்கனவே ஒருத்தன் கூட குடும்பம் நடத்தறதே கஷ்டமா இருக்கு , அதுல இது வேறவா ? "
" ஊருக்கு போனார்னு சொன்னியே எப்ப வராரு ? "
" ஆமா அவர் போய் ரெண்டு நாளாச்சு , என்ன பிரயோஜனம் ...ம்ம் ..ஒன்னத்தையும் காணோம் "
" நான் என்ன பண்றது அவ கண்ல மன்ன தூவிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருது , அவள போட்டுத்தள்ளுனாதான் நிம்மதி " , பெருமூச்சு விட்டவனின் வாயை பொத்தினாள் அவள் ...
அவன் ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்து விட்டு " என்ன தான் இருந்தாலும் நீயும் ஒரு பொம்பளதான்னு நிரூபிச்சுட்ட " என்று சொன்னான் ...
" அதெல்லாம் ஒன்னும் இல்ல , நீ அவள போட்டுத்தள்ளிட்டு உள்ள போய்ட்டேன்னா அப்புறம் ஏன் கதி ? "
" அத்தானே பாத்தேன் , நீயாவது அவ மேல இரக்கபடறதாவது "
வாய் பேசிக்கொண்டிருந்தாலும் கைகள் அவளிடம் எதையோ தேடிக் கொண்டிருந்தன ...
" உர்ர்ர் , உர்ர்ர் " அந்த சத்தம் இவர்களை ரொம்பவே தொந்தரவு செய்தது ...
" மொதல்ல அந்த நாய துரத்து , கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுதா ?...
அவள் சொன்னவுடன் , அவன் கையில் கிடைத்த எதையோ அதன் மேல் விட்டெறிய , அந்த கருப்பு நாய் அதற்கு பயந்தது போல பின்வாங்கி திரும்பவும் வந்து லொள் என்றது ...
" சனியன் , இந்த நாய பாத்தாலே எனக்கு ஆவாது , வெறி நாய் மாதிரி இருக்கு ,சுத்தமா வெவஸ்தையே கெடையாது , துரத்து ! ... திரும்பவும் அவள் உசுப்பேற்ற அவன் கல்லை பொறுக்கிக்கொண்டு நாயை துரத்தி ஓட , இந்த சத்தத்தில் எரிச்சலடைந்த குருட்டு பிச்சைக்காரன் ,
" இந்த நாய்ங்களுக்கு வேற வேலையே இல்ல " என்று முனகியவாறு திரும்பிப்படுத்தான் ...
19 comments:
" இந்த நாய்ங்களுக்கு வேற வேலையே இல்ல
சூப்பர் அனந்து ! ஃபினிஷிங்க் டச் சூப்பர்!
இராஜராஜேஸ்வரி said...
" இந்த நாய்ங்களுக்கு வேற வேலையே இல்ல "
சரியா சொன்னீங்க போங்க ...
நன்றி ...
மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...
சூப்பர் அனந்து ! ஃபினிஷிங்க் டச் சூப்பர்!
நன்றி மூன்றாம் கோணம் ...
ஆமாம். வெறிநாய்கள். விவஸ்தைகெட்ட நாய்களும் கூட.
கவிதைகள் எழுதுவதை விட குறுங்கதைகள் எழுதுவது கடினம்... மிக அசாதாரண பதிவு...வாழ்த்துக்கள்...:)
visit me at- cmayilan.blogspot.com
முடிவு...முத்தாய்ப்பு அனந்து...
very nice
S.R.Seshan....
கடம்பவன குயில் said...
ஆமாம். வெறிநாய்கள். விவஸ்தைகெட்ட நாய்களும் கூட.
சரி விடுங்க ... என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் ... தேர்தல் பிஸியா ?
மயிலன் said...
கவிதைகள் எழுதுவதை விட குறுங்கதைகள் எழுதுவது கடினம்... மிக அசாதாரண பதிவு...வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி மயிலன் ...
ரெவெரி said...
முடிவு...முத்தாய்ப்பு அனந்து...
நன்றி ரெவெரி ...
Anonymous said...
very nice
S.R.Seshan....
Thanks S.R.Seshan ...
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
சூப்பர், இப்ப சிலபேர் காதல் என்கிற பேரில் இததான் பண்றாங்க.
mahesh kumar said...
சூப்பர், இப்ப சிலபேர் காதல் என்கிற பேரில் இததான் பண்றாங்க.
நன்றி ...!
கல்ல கண்ட நாய்ங்கள காணும், நாய்ங்கள கண்டா கல்ல காணும்..!! நச் கதை..!
திவ்யா @ தேன்மொழி said...
கல்ல கண்ட நாய்ங்கள காணும், நாய்ங்கள கண்டா கல்ல காணும்..!! நச் கதை..!
Monday, March 12, 2012
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!
arumai
arul said...
arumai
Thanks ...
Post a Comment