29 October 2011

ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...

     ஒரு படத்திலேயே இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் , சமீபத்தில் தோல்வியே கண்டிராத சூப்பர் ஹீரோ இருவரின் கூட்டணியில் ஆறு வருட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை ... அதிலும் பிரமோக்களை தாண்டி " போதி தர்மன் " என்ற பல்லவ இளவரசனை பற்றி ஏ.ஆர்..முருகதாஸ் எடுத்துக்கொண்ட கதைக்களம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக்கியது ...

    வான சாஸ்திரத்தில்  இருந்து வயகரா வரை இங்கிருந்து மூல காரணிகளை வெளிநாட்டவர்கள்  சுருட்டி செல்ல நாமோ அந்த வரலாறு தெரியாமல் அயல்நாட்டு  மோகத்தில் இருக்கிறோம் என்பதை உரக்க சொல்வதால் வரலாற்றோடு கலந்து கட்டிய கற்பனையை நாம் கண்டுகொள்ளாமல் விடலாம் ...
                                  
     1600  வருடங்களுக்கு முன் காஞ்சிபுரத்திலிருந்து சீனா செல்லும் பல்லவ இளவரசன் போதி தர்மன் அங்கேயே தங்கி சீனர்களுக்கு மருத்துவத்தையும்  , தற்காப்பு கலையையும் கற்று தருவதோடல்லாமல் தன் வாழ்கையையும்  முடித்து கொள்கிறார் ...

    தற்காலத்தில் சீனர்கள் அந்த கலையை பயோ வார் மூலம் நம்மை அழிப்பதற்காகவும்  , போதி தர்மன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ருதியை கொல்வதற்காகவும் டோன் லீ என்பவனை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் ... போதிதர்மன் பரம்பரையில் வந்த சூர்யாவை கொண்டு இந்த பயங்கரத்தை ஸ்ருதி எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை ...

     நடுவில் மானே தேனே போல ஆறு பாடல்கள் , காதல் , வில்லனின் ஹிப்னாடிச கொலைகள் , நீள , நீள வசனங்கள் , போதி தர்மன் பற்றிய போதனைகள் என போகிறது படம் ...

    முதல் பதினைந்து நிமிடத்திற்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை பார்வையாளர்களுக்கு சொல்லி விடுவதே சிறந்த திரைக்கதைக்கு அடையாளம்  என்பார்கள் ... ஆனால் இந்த படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்குள் மொத்த கதையையும் சொல்லிவிட்டு பின் படம் முழுவதும் அந்த சுவாரஷ்யத்தை தக்க வைக்க தவறி விடுகிறார்கள் ...

    சூர்யா சிக்ஸ் பேக்கிற்கு மெனக்கெட்ட அளவிற்கு நடிப்பில் மெனக்கெடவில்லை ... அவர் போதி  தர்மனாக பிரகாசித்தாலும்  அவருடைய அரவிந்தன் கேரக்டரை வில்லனும்  , ஸ்ருதியும் அமுக்கி விடுகிறார்கள் ... அதிலும் சூர்யா ஸ்ருதியை  விழுந்து , விழுந்து காதலித்து விட்டு பின் ஸ்ருதி ஏமாற்றி விட்டார் என்று சொல்லி " எம்மா , எம்மா " என வழக்கமான காதல் தோல்வி  பாட்டு பாடுவது செயற்கை திணிப்பு ...

    ஸ்ருதிக்கு தமிழில் அருமையான அறிமுகம் ... படத்தில் சூர்யாவை விட அவருக்கு தான் வசனங்கள் அதிகம் ... அதனால் தானோ என்னவோ அவர் கஜினி அசின் அளவிற்கு மனதில் ஒட்டவில்லை ... மற்ற படி கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ...

    வில்லனை எதிபார்த்து படத்திற்கு  நிறைய பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன் ... அவர் அறிமுகம் ஆகும் போது அவ்வளவு கைதட்டல்கள் ... பார்வையாலே கலக்கும் வில்லன் ... அதற்காக இவர் படம் நெடுக கண்களாலேயே ஹிபனாடிச கொலைகள் செய்து கொண்டிருப்பதும் கொடுமை... ஒருவனை ஹிப்னாடிசம் செய்யும் போது நடுவில் தடுப்பு இருக்க கூடாது என்பது நியதி , ஆனால் வில்லனோ சகட்டுமேனிக்கு லாரி , கார் ஓட்டுபவர் என்று ஒருவனை விடாமல் தொடர்ச்சியாக கொலை செய்யும் போது சலிப்பு தட்டுகிறது ...

    ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனுக்கு ஒரு சபாஷ் ... படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை அருமையான ஒளிப்பதிவு ... ஹாரிஸ்
" ஒ ரிங்கா " பாடலை " டாக்ஸி டாக்ஸி " யில் இருந்து சுட்டிருந்தாலும்    
              
" எம்மா எம்மா " பாடலிலும் " தோழா " பாடலிலும் ஒரிஜினாலிட்டி காட்டுகிறார் ... அதிலும் குறிப்பாக " எம்மா எம்மா " வில் எஸ்.பி.பி யின் குரலும் , கபிலனின் வரிகளும் மனதை வருடுகின்றன ... இருந்தும் பாடலுக்கான லீட் அழுத்தமாக இல்லாததால் அழகு குறைகிறது ...

     ஏற்கனவே , தசாவதாரம் போன்ற படங்கள் பயோ வாரை தொட்டிருந்தாலும்  இதற்காக இயக்குனர் நிறைய மெனக்கட்டிருப்பது டீடைளிங்கில் தெரிகிறது ... ஆனால் அது ஓவர்டோஸ் ஆகாமல் தடுத்திருக்கலாம் ...

     " மஞ்சளே மொளைக்காத நாட்டுக்காரன் நம்ம ஊர் மஞ்சளுக்கு பேட்டர்ன் ரைட் வாங்குறான் " ,  " 800 வருசமா இருக்கற இங்கிலிஷ்ல நீங்க பேசலாம் பல்லாயிரம் வருசமா இருக்கற தமிழ்ல நான் பேச கூடாதா " போன்ற நச் வசனங்கள் நிறைய ... வசனங்களில் நாம் நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டு எதையோ தேடி அலைகிறோம் என்பதன் ஏக்கம் நன்றாக தெரிகிறது ... அதே போல தமிழ் , தமிழன் என்று வசனங்களில் பிரச்சார  நெடி ...
        
     போதி தர்மன் " தமிழன் "  என்று நிறைய இடங்களில் சொல்கிறார்கள் , ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் , அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு ஆண்டவர்கள் என்கிறது தமிழர் வரலாறு ... அதே போல் போதி தர்மன் சீனாவில் பரப்பியது " ஜென் புத்திசம் " என்ற கோட்பாடே , தற்காப்பு கலைகள் அங்கு முன்பே இருந்தன என்கிறது உலக வரலாறு ...

     சீனாவில் கடவுளாக வணங்கப்படும் புத்தர் நம் நாட்டில் பிறந்தவரே ... அவரை போல போதி தருமனையும் 28 வது குரு மாராக சீனர்கள் ஏற்றுக்கொண்டதில் நமக்கெல்லாம் பெருமை , அந்த பெருமையை இந்த படம் மூலம் பறை சாற்றியதால் ஏ.ஆர்.முருகதாஸை கண்டிப்பாக பாராட்டலாம் ...

     ஆனால் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏதோ இருவர் மட்டும் சம்பந்தப்பட்டது போல எடுத்து சென்றது  , காட்சிகளால் சொல்ல வந்ததை விளக்காமல் வெறும் வசனங்களாலேயே நிரப்புவது , " கஜினி " யில் இருந்தது போல காதல் காட்சிகள் இதில் சுவாரஷ்யமாக இல்லாதது இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...

ஸ்கோர் கார்ட் : 43

22 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>ஆனால் இந்த படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்குள் மொத்த கதையையும் சொல்லிவிட்டு பின் படம் முழுவதும் அந்த சுவாரஷ்யத்தை தக்க வைக்க தவறி விடுகிறார்கள் ...

குட் அனலைஸிங்க்

ananthu said...

சி.பி.செந்தில்குமார் said...
>>ஆனால் இந்த படத்தில் முதல் இருபது நிமிடங்களுக்குள் மொத்த கதையையும் சொல்லிவிட்டு பின் படம் முழுவதும் அந்த சுவாரஷ்யத்தை தக்க வைக்க தவறி விடுகிறார்கள் ...

குட் அனலைஸிங்க்

நன்றி சி.பி ...

Anonymous said...

Film is good. Not matching the higHHH level of xpectations... Decent & real review - Eswaran Kandaswamy, Chennai 09884481202

ananthu said...

Anonymous said...
Film is good. Not matching the higHHH level of xpectations... Decent & real review - Eswaran Kandaswamy, Chennai 09884481202

Thanks Eswaran ...

இராஜராஜேஸ்வரி said...

ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...

Anonymous said...

நல்ல அலசல்..

ananthu said...

இராஜராஜேஸ்வரி said...
ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...

நன்றி...

ananthu said...

ரெவெரி said...
நல்ல அலசல்..

நன்றி...

Tamilthotil said...

நண்பரே,
”போதி தர்மன் " தமிழன் " என்று நிறைய இடங்களில் சொல்கிறார்கள் , ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் , அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு ஆண்டவர்கள் என்கிறது தமிழர் வரலாறு ...”

வரலாற்றில் உண்மையில் பல்லவர்களின் மூலம்
(ஆதி) யாரென இது வரை சரியாக எந்த விளக்கமும் இல்லை. சிலர் அவர்கள் சோழர்கள் என்கிறார்கள். சிலர் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எல்லோரும் அறிந்த ஒரு தகவல் கடலோரம் ஒதுங்கிய ஒரு குழந்தையை இளவரசனாகக் கொண்டு உருவான அரசு தான் பல்லவ அரசு.சமிஸ்கிருதம் பல்லவர்கள் காலத்தில் ஓங்கி இருந்ததுக்கு காரணம், வட இந்தியாவில் இருந்து வந்த புத்தமும்,சமணமும் தான். மற்றபடி தமிழ் தான் பல்லவர்களின் ஆட்சி மொழி.ஆனால் பெயரளவில் இருந்து சில புரட்சிக்குப் பின் தமிழ் புத்துயிர் பெற்ற வரலாறெல்லாம் இருக்கிறது.

”அதே போல் போதி தர்மன் சீனாவில் பரப்பியது " ஜென் புத்திசம் " என்ற கோட்பாடே , தற்காப்பு கலைகள் அங்கு முன்பே இருந்தன என்கிறது உலக வரலாறு .”
நீங்கல் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் படத்தில் காண்பித்த காட்சிகள் பொய்யில்லை.அந்த தற்காப்பு கலைக்குப் புத்துயிர் தந்தவர் போதி தர்மர் அதை மறுக்க இயலாது.
என்ன தான் வரலாறு சொன்னாலும், இந்தப் படத்தில் போதித் தர்மரை வைத்து ஒரு புகழைத் தேடிக் கொள்ளலாம் என்று இயக்குனர் நினைத்தது தவறில்லை.ஆனால் அதற்கான திரைக்கதை படத்தில் இல்லை.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
பாராட்டுக்கள்

ananthu said...

Tamilraja k said...

பல்லவர்கள் பற்றி பல்வேறு கூற்றுக்கள் இருந்தாலும் அவர்கள் முதலில் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு தான் ஆண்டார்கள்... நீங்கள் சொன்னது போல இதற்கு சமணமும் , புத்தமும் காரணமாக இருக்கலாம் ... வரலாறு தெரிந்த உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ...

ananthu said...

தமிழினி said...
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com/
ஒட்டுப்பட்டை பெற
நன்றி

என் எல்லா பதிவுகளையும் தமிழ் 10 இல் இணைத்து வருகிறேன் ... உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி ...

Tamilthotil said...

அருமை இருப்பினும் நிறைய சந்தேகங்கள் பல்லவரைப் பற்றி இருந்தாலும், ஒரு முறை தமிழ்ச்செல்வி என்ற பெண் தன் கணவனுக்கு தந்த நீதியற்ற தண்டனைக்காகவும் தமிழுக்காகவும் பல்லவர்கள் காலத்தில் தீக்குளித்தால் என்று படித்தேன்.அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் சொல்வதும் நடந்திருப்பதை மறுக்க இயலாது.தமிழ் நிறைய எதிர்புகளை சந்தித்து தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது...
”எனக்கு உலகமாகவே தெரிகிறாள்…” வேறு யாரும் இல்லை நான் தான். நீங்கள் அழைப்பதற்கு முன்னரே நான் அழையாத விருந்தாளியாய் உங்கள் தளத்தில் இணைந்துவிட்டேன்

சிவகுமாரன் said...

அருமையான விமர்சனம். இனி நான் படம் பார்க்க தேவையில்லை.

அம்பாளடியாள் said...

விமர்சனம் அருமை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .....

ananthu said...

சிவகுமாரன் said...
அருமையான விமர்சனம். இனி நான் படம் பார்க்க தேவையில்லை.

நன்றி சும்மா படம் போய் பாருங்க ..

ananthu said...

அம்பாளடியாள் said...
விமர்சனம் அருமை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .....

மிக்க நன்றி ...

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

அருமையான விமர்சனம்.
//போதி தர்மன் " தமிழன் " என்று நிறைய இடங்களில் சொல்கிறார்கள் , ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் , அவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக கொண்டு ஆண்டவர்கள் என்கிறது தமிழர் வரலாறு ...”//
புதிய சேதி ( நான் என்னை சொன்னென்).

ananthu said...

கிருபாகரன் said...

நன்றி .

sakthimangalyam said...

போதி தர்மன் காட்சிகளை
பிளாஷ் பேக்கில் சொல்லி இருக்கலாம் .
அந்த காதல் தோல்வி பாட்டு பொருந்தவில்லை .
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள் !
சக்திமாங்கல்யம் ,பெங்களூரு

padam wast

ananthu said...

Anonymous said...
padam wast

Content is good but execution is bad...Thanks

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...